உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பாடல் - 12

 உளமு முயிரு முணர்வுஞ் செயலு
முளவாங் கிளையிரண் டுந்தீபற
வொன்றவற் றின்மூல முந்தீபற. [12]


உளமும் உயிரும் உணர்வும் செயலும்
உளவாம் கிளை இரண்டு உந்தீ பற
ஒன்று அவற்றின் மூலம் உந்தீ பற.

 


விளக்கம்


மனம் என்பது உணர்வு ( Knowing ) . உயிர் என்பது செயல் (Doing).

இவ்விரண்டின் மூலமும் ஒன்றே.

விளக்க உரை


ஜீவாதார சக்தி அல்லது உயிர் சக்தியின் (Vital Force) அடிப்படை மூச்சு எனப்படும் பிராணன். மனமும் பிராணனை அடிப்படையாகக் கொண்டதே.

மனம் (ஞான சக்தி) அறிய (Knowing) உதவுகிறது. பிராணன் (கிரியா சக்தி) செய்ய (Doing ) உதவுகிறது. இரண்டும் உதயம் ஆகும் இடம் ஒன்றே.


HOME