உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் - 10
உதித்த
விடத்தி
லொடுங்கி
யிருத்த
லதுகன்மம்
பத்தியு
முந்தீபற
வதுயோக ஞானமு
முந்தீபற. [10]
உதித்த
இடத்தில்
ஒடுங்கி
இருத்தல்
அது கன்மம்
பத்தியும்
உந்தீ பற
அது யோக
ஞானமும்
உந்தீ பற.
விளக்கம்
என்னில் இறையுணர்வு உதித்த இடத்தில் ( Source ), எப்பொழுதும் நிலைகொண்டு ( Abiding) , அடங்கியிருத்தல் ( Subsiding ) - இதுவே
கர்மம் ( Desireless Action ), பக்தி (Bhakthi),
யோகம் எனப்படும் இறைவனிடம் ஐக்கியம் ( Yoga - Union with God )
விளக்க உரை
ரமணர் இறை உணர்வு உதிக்கும் இடமாக நமது மார்பின் வலது பக்கத்தை, இதயத்தின் இருப்பிடமாக கூறுகிறார். நம் மனதை இதயத்திற்கு திருப்பி, எண்ணங்கள் அற்று, இதயத்திலே சங்கமித்து இருப்பதுவே, ( Dissolving of the Thinking Mind in the Heart), கர்மம் (Desireless Action ), பக்தி (Bhakthi), யோகம் எனப்படும் இறைவனிடம் ஐக்கியம் ( Yoga - Union with God ) என கூறுகிறார். இந்நிலையில் தியானத்தை கடந்து, எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பதே மிக உயரிய நிலையும், உண்மையும் ஆகும். இந்நிலையில் நாம் இறைவனிடம் சங்கமித்து இருப்போம்.