உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் - 7
விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்
விட்டிடா துன்னலே யுந்தீபற
விசேடமா
முன்னவே
யுந்தீபற. [7]
விட்டுக்
கருதலின் ஆறு
நெய்
வீழ்ச்சி
போல்
விட்டிடாது உன்னலே உந்தீ பற
விசேடமாம் உன்னவே உந்தீ பற.
விளக்கம்
சீராக ஒழுகும் நீர் விழ்ச்சி, நெய் போன்று
தியானம் தடையின்றி இருத்தல் நன்று.
விளக்க உரை
எண்ணங்களினால் தடைபடும் தியானத்தைவிட, சீராக ஒழுகும் நீர் விழ்ச்சி, நெய் போன்று தியானம் தடையின்றி இருத்தல் நன்று. இதுவே உண்மையான தியானம.
இதில் நெய் இறைவனின் மேல் கொண்ட அன்பின் அடையாளமாகவும், ஆறு கடலினை சென்று அடைவது போன்றும், மனது அதன் மூலாதாரத்தையும் அடைய தியானம் ஏதுவாக உள்ளதாக கொள்ளலாம்.